நடிகை ஹேமாமாலினி, பிரிஜ் பூஷண் மகன் வெற்றி

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் 1,35,356 வாக்கு வித்தியாசத்திலும், ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல் 37,810 வாக்கு வித்தியாசத்தில் மிர்சாபூர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். பிரபல நடிகையும் பாஜ எம்பியுமான ஹேமா மாலினி மதுரா தொகுதியில் 2,93,407 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் சீட் மறுக்கப்பட்ட பாஜ எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான பிரஜ் பூஷண் சரண் சிங்கின் மகன் கரண் பூஷண் சிங் கைசர்கஞ்ச் தொகுதியில் 1,48,843 வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாடியின் பகத் ராமை வென்றார்.

The post நடிகை ஹேமாமாலினி, பிரிஜ் பூஷண் மகன் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: