வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி வெற்றி: 33 பேர் டெபாசிட் இழந்தனர்

சென்னை: வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, 4,97,333 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருடன் போட்டியிட்ட 33 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜ சார்பில் வழக்கறிஞர் பால்கனகராஜ் உள்ளிட்ட 35 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,97,333 வாக்குகள் பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை விட 3,39,222 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 1,58,111 வாக்குகளும், பாஜ 1,14,003, நாம் தமிழர் வேட்பாளர் அமுதினி 92,111 வாக்குகளும் பெற்றனர். நோட்டா 13,106. இதைத் தொடர்ந்து 2வது முறையாக வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் பால்கனகராஜ், நாம் தமிழர் வேட்பாளர் அமுதினி உள்ளிட்ட 33 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

The post வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி வெற்றி: 33 பேர் டெபாசிட் இழந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: