கர்நாடகாவில் 6 தொகுதிகளை பறிகொடுத்த பாஜ

பெங்களூரு: கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜவுக்கு 17, அதன் கூட்டணி கட்சியான மஜத 2, காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மக்களவைக்கு கடந்த 2019ல் நடந்த தேர்தலில் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாரதிய ஜனதா 25 தொகுதியிலும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் பாஜ ஆதரவு பெற்ற சுமலதா ஆகியோர் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். 2024ல் தேர்தலில் இந்த வெற்றி-தோல்வியில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த தேர்தலில் கூட்டணி பலத்துடன் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜ, இந்த தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 6 தொகுதிகளை இழந்துள்ளது.

The post கர்நாடகாவில் 6 தொகுதிகளை பறிகொடுத்த பாஜ appeared first on Dinakaran.

Related Stories: