வேட்பு மனுத்தாக்கல் செய்ததும் பிரசார பாடல்களை ஒலிபரப்பியபடி, பலாப்பழத்தை தலையில் சுமந்து வலம் வந்தவர் வேலூரில் நான்தான் வெற்றிப்பெற போகிறேன் என்றும் அள்ளி விட்டார். நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் நடிகர் மன்சூர்அலிகான் 8 சுற்று முடிவில் 1155 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அதேநேரத்தில் 8 சுற்று முடிவில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 3,483. 12வது சுற்று முடிவில் மன்சூர் அலிகான் 1,784 வாக்குகள் பெற்றிருந்தார். நோட்டாவுக்கு 5,213 வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே அங்கு வந்த நடிகர் மன்சூர்அலிகான், சட்டையின் மேல்பட்டன்களை கழற்றி விட்டு ஒரு பக்கமாக சாய்ந்து நடந்தபடி வலம் வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஐயா, நான் ஓட்டுக்கு பணம் கொடுக்கலை. பரிசு பொருளையும் கொடுக்கலை. ஆகையால வெற்றிவாய்ப்பும் இல்லை. தெரிந்தே வாக்கு எண்ணிக்கையை வேடிக்கை பார்க்க சும்மாதான் வந்தேன்’ என்றார்.
The post சும்மா வேடிக்கை பார்க்க வந்தேன்..நோட்டாவிடம் தோற்ற நடிகர் மன்சூர்அலிகான் தமாசு.. appeared first on Dinakaran.