தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிட்டும் 11.4% வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜ: அண்ணாமலை அளந்த அனைத்தும் கட்டுக்கதையானது

சென்னை: தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிட்டும் பாஜவால் வெறும் 11.4 சதவீதம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம் 20 இடங்களைப் பிடிப்போம், 25 சதவீதம் வாக்குகளைப் பெறுவோம் என்று அண்ணாமலை பேசிய அத்தனைப் பேச்சுக்களும் பொய்யானது என நிரூபணமாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜ 25 சதவீதம் வாக்குகளை பெறும். 10 முதல் 20 இடங்கள் வரை பாஜக வெற்றி பெறும் என்றும் திமுக, பாஜ இடையில்தான் போட்டி என்றும், அதிமுக ஒரு பொருட்டே அல்ல என்றும் அண்ணாமலை கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இதன் அடிப்படையில் தேர்தலில் பாஜ 19 தொகுதிகளில் போட்டியிட்டது.

இவரது பேச்சை நம்பி, கூட்டணி கட்சி தலைவர்களான ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், ஜான்பாண்டியன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். பாஜக சின்னத்தில் 23 பேர் களம் கண்ட நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் பல கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டது. இதை தேர்தல் ஆணையமும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இவ்வளவு செலவு செய்தும், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ஆதரவு இருந்தும் தமிழ்நாட்டில் பாஜவால் ஓரு இடத்தை கூடப் பிடிக்க முடியவில்லை. பாஜ வெறும் 11.4 சதவீதம் வாக்குகள் மட்டும்தான் பெற்றுள்ளது. அண்ணாமலை வெற்றி பெறுவதாக கூறிய இடங்கள், வாக்கு சதவீதம் என அனைத்தும் கானல் நீரானதுதான் மிச்சம் என்று கட்சி தொண்டர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

The post தமிழகத்தில் 23 தொகுதிகளில் போட்டியிட்டும் 11.4% வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜ: அண்ணாமலை அளந்த அனைத்தும் கட்டுக்கதையானது appeared first on Dinakaran.

Related Stories: