ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!!

சென்னை: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், பாஜக தலை மேல தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதியில் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி 133 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆட்சிக்காலங்களில் நீங்கள் செயல்படுத்திய திட்டங்களும், 2024 தேர்தலில் மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளும் உங்கள் தலைமையிலான அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளன. ஆந்திர மக்களுக்கு நல்லாட்சி வழங்க எனது வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

The post ஆந்திராவில் ஆட்சியை பிடித்துள்ள தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: