மக்களவை தேர்தலில் முன்னிலை; அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்: இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகம்

சென்னை: மக்களவை தேர்தலில் முன்னிலையை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டது. வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறன் 42 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மற்ற தொகுதிகளில் அனைத்தும் 40 ஆயிரம், 30 ஆயிரம், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் உள்ளனர். தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் காலை முதல் திமுக தொண்டர்கள் வரத்தொடங்கினர்.

ஒவ்வொரு திமுக கூட்டணி கட்சியினர் முன்னிலை நிலவரம் வரும் போதும் அவர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர். மேலும் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இதனால், இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயம் தொண்டர்களால் களைக்கட்டியிருந்தது.

The post மக்களவை தேர்தலில் முன்னிலை; அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்: இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: