மக்களவைத் தேர்தல் 2024 : கேரளாவில் கால்பதித்தது பாஜக.. காங்கிரஸ் கூட்டணி அபாரம்.. மோசமாக வீழ்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

திருவனந்தபுரம் : கேரளாவில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றதன் மூலம் பாஜக அங்கு கால் பதித்துள்ளது. கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்தது. 2024 மக்களவைத் தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் (மாணி) ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாரத் தர்ம ஜன சேனா 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் இன்றைய தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள்படி, காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் காங்கிரஸ் மட்டும் 13 இடங்களிலும், ஐயுஎம்எல் கட்சி இரண்டு இடங்களிலும், கேரளா காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஆர்எஸ்பி கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.பாஜக ஒரு இடத்தில் வெற்றி உள்பட மொத்தம் இரண்டு இடங்களில் முன்னிலை விகிக்கிறது.திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்று அசத்தி உள்ளார்.

The post மக்களவைத் தேர்தல் 2024 : கேரளாவில் கால்பதித்தது பாஜக.. காங்கிரஸ் கூட்டணி அபாரம்.. மோசமாக வீழ்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: