×

விதிமீறிய வாகனங்கள் ரூ.14 லட்சம் அபராதம்

 

ஆலந்தூர், மே 31: மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் கடந்த மாதம் 520 வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், அதிக பாரம் ஏற்றியது, அதிவேகமாக இயக்குவது, ஆவணங்களை புதுப்பிக்காமல் இருப்பது உள்ளிட்ட விதிமீறிய 169 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதமாக ரூ.14.2 லட்சம் விதிக்கப்பட்டது. குறிப்பாக அதிக பாரம் ஏற்றிய 22 வாகனங்கள், அதிவேகமாக இயக்கப்பட்ட 12 வாகனங்கள், ஆவணங்களே இல்லாத 10 வாகனங்களுக்கு ரூ.97 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

The post விதிமீறிய வாகனங்கள் ரூ.14 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Alandur ,Meenambakkam ,Sundharamurthy ,Rajendran ,
× RELATED கிண்டி, மீனம்பாக்கத்தில் கோடை வெயில் உக்கிரத்தில் 2 இடங்களில் தீ விபத்து