×

டிஎஸ் குரூப் பங்குதாரர் மாசிலாமணி பொன்னுத்துரை காலமானார்

தண்டையார்பேட்டை: வடசென்னையில் டி.எஸ். குரூப்ஸ் சார்பில் பல்வேறு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதன் பங்குதாரரரும் ஆர்.கே. நகர் பகுதி திமுக செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன் மாமனாருமான மாசிலாமணி பொன்னுத்துரை நேற்று அதிகாலை உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய உடல் கொருக்குப்பேட்டையில் உள்ள டேனியல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே‌.எபினேசர், வழக்கறிஞர் கிரிராஜன் எம்.பி, ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் லட்சுமணன், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், வழக்கறிஞர் மருது கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்.இளவரசன் மற்றும் பகுதி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பாதிரியார்கள், டி.எஸ். குரூப் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று காலை 10 மணி அளவில் தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள சிஎஸ்ஐ கிறுஸ்துவநாதர் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு காசிமேடு கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

The post டிஎஸ் குரூப் பங்குதாரர் மாசிலாமணி பொன்னுத்துரை காலமானார் appeared first on Dinakaran.

Tags : TS Group ,Masilamani Ponnuthurai ,Thandaiyarpet ,D.S. ,North Chennai ,R.K. Masilamani Ponnuthurai ,DMK ,city secretary ,Jebadas Pandian ,Dinakaran ,
× RELATED வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி...