×

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து 645 கன அடியாக உயர்ந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 15.72 அடி, மொத்த கொள்ளளவு 1666 மில்லியன் கன அடி, நீர்வரத்து 645 கன அடி, நீர் வெளியேற்றம் 136 கன அடியாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக ஒரே நாள் இரவில் 44 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ஏரிக்கு பூஜ்ஜியத்தில் இருந்த நீர் வரத்தானது 645 கன அடியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் உயர்வு appeared first on Dinakaran.

Tags : Sembarambakkam ,Pallavaram ,Chennai ,Chembarambakkam lake ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...