மீன் வளத்துறை சார்பில் 11 படகுகள் மீது நடவடிக்கை

 

தொண்டி, மே 29: மீன் வளத்துறையின் சார்பில் படகுகள் ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறையின் துணை இயக்குனர் அறிவுரைப்படி நேற்று முதல் படகுகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று தேவிபட்டினம் முதல் முடிவீரம்பட்டினம் வரை கடலில் ரோந்து பணி நடைபெற்றது. ரோந்து பணியின் போது மீன்பிடி தடை காலத்தின் போது தடை விதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த தேவிபட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 11 படகுகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றின் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரோந்து பணியில் தேவிபட்டினம் மீன்வள ஆய்வாளர் காளீஸ்வரன், தொண்டி மீன்வள ஆய்வாளர் அபுதாகிர், கடல் அமலாக்கப் பிரிவு சார்பு ஆய்வாளர் குருநாதன், காவலர் காதர் இப்ராஹிம் மற்றும் சாகரமித்ரா பணியாளர்கள் ஈடுபட்டனர். வரும் நாள்களில் தொண்டி, நம்புதாளை பகுதியில் ஆய்வு பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post மீன் வளத்துறை சார்பில் 11 படகுகள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: