×

சென்னையில் 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 584 கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும் : ராதாகிருஷ்ணன்

சென்னை : வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு வரும் 29ம் தேதி முதல் கட்ட பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7ம் கட்ட தேர்தல் வருகிற ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.அன்றைய தினத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சார்ந்த பணிகள் நாடு முழுவதும் முழு வீச்சில் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “வாக்கு எண்ணும் ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி பொருத்தும் பணி ஆய்வு செய்யப்பட்டது.வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். வாக்கு எண்ணிக்கை பணியில், 357 நுண்பார்வையாளர்கள், 380 உதவியாளர்கள், 374 மேற்பார்வையாளர் என 1,433 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 584 கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னையில் 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 584 கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும் : ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Radhakrishnan ,Municipal ,Corporation ,Commissioner ,Lok Sabha elections ,India ,
× RELATED மழை நீர் வடிகால் பணிகள்...