பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார் மோதி பெண் படுகாயம்: சிசிடிவி காட்சிகள் வைரல்

வேலூர், மே 26: வேலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பெட்ரோல் பங்க்கில் புகுந்ததில் பெண் படுகாயமடைந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைராகி உள்ளது. வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன்(38), ராணுவ வீரர். இவரது மனைவி ரேகா(32). இவர் நேற்று முன்தினம் காலை வேலூர் அடுத்த ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில், பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக நின்றுகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென பெட்ரோல் பங்க்கில் நின்றுக்கொண்டிருந்த ரேகா மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ரேகா, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திய டிரைவர், அரியூரை சேர்ந்த சுரேஷ்பாபு என்பது தெரியவந்தது. இதுகுறித்து அரியூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பெட்ரோல் பங்க்கில் கார் புகுந்து பெண் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

The post பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார் மோதி பெண் படுகாயம்: சிசிடிவி காட்சிகள் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: