×

அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அரியலூர், மே26:அரியலூர் அரசு ஐடிஐ -யில் 2024-2025ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூன்7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,-க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn < http://www.skilltraining.tn/ > gov.in < http://gov.in/ > என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 40 வயதிற்குள்ளும், பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது, விண்ணப்பக் கட்டணம் ரூ.50 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாக செலுத்த வேண்டும்.அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையங்களிலும் தனியார் கணினி மையம் மூலமும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 1. அரசு தொழிற்பயற்சி நிலையம், அரியலூர் 9499055877, 04329-228408. 2. அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆண்டிமடம் 9499055879 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

 

The post அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur Govt ITI ,Ariyalur ,Ariyalur Government ITI ,Ariyalur Govt Vocational Training Institute ,Antimadam Govt Vocational Training Institute ,Private ITIs ,Dinakaran ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐ.ல் மாணவர்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு