- தொழிலாளர் குறை தீர்க்கும் முகாம்
- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்
- அரியலூர் வட்டார கூட்டுறவு சங்கங்கள்
- அரியலூர் மண்டல கூட்டுறவு சங்கங்கள்
- தீபசங்கரி
- பரிகாரம்
- தின மலர்
அரியலூர், ஜூலை 13: அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம் அரியலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தீபாசங்கரி தலைமையில் அரியலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில், கூட்டுறவுத்துறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சங்க பணியாளர்களிடமிருந்து 20 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 2 மனுக்கள் உடனடியாக தீர்வு செய்யப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில், சரகத் துணைப்பதிவாளர், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post அரியலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம் appeared first on Dinakaran.