கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை திட்டம்: அறநிலையத்துறை ஆணையர் தகவல்

 

மதுரை, மே 25: இந்து அறநிலைத்துறைஆணையர் முரளிதரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் பணியாற்றும் 45,477 பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தினை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக சென்னையிலுள்ள இரண்டு இணை ஆணையர்களின் மண்டலத்திற்குட்பட்ட கோயில் பணியாளர்களுக்கு தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதில், சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 1050 பணியாளர்கள் பயன்பெற்றனர். வேலூர், கடலூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திலும், விழுப்புரம், சேலம் மாவட்டத்தில் ஜூலையிலும், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட்டிலும், மதுரை, திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திலும் இதற்கான முகாம்கள் நடைபெறுகிறது.திருச்சி, நெல்லை மாவட்டத்தில் அக்டோபரிலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவம்பரிலும், தஞ்சாவூர், கோவை மாவட்டத்தில் டிசம்பரிலும், திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கோயில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை திட்டம்: அறநிலையத்துறை ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: