கடந்த ஆண்டை விட மே மாதத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் கடந்த மார்ச் தொடக்கத்தில் இருந்தே வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெப்பம் என்றாலே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் முதல் தேர்வாக ‘பீர்’ தான் இருக்கும். அந்த வகையில், தற்போது டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகமும் புது வகை பீர்களையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிலையில், கோடை யில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மே 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை 23,66,856 பீர் பாட்டில் அடங்கிய பெட்டிகள் விற்பனையாகியுள்ளது. 2023 மே மாதம் 18,70,289 பீர் பெட்டிகள் விற்பனை யாகி உள்ளது. இது 27 சதவீதம் அதிகம். தமிழகத்திலேயே பீர் விற்பனையில் காஞ்சிபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து சேலம், திருப்பூர் 2வது, 3வது இடத்திலும் திருவள்ளூர் 4ம் இடத்திலும் உள்ளன.

The post கடந்த ஆண்டை விட மே மாதத்தில் பீர் விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: