போக்குவரத்து தொழிலாளர் – போலீசார் மோதல் தீர்வு காண வேண்டும்: தொழிற்சங்கங்கள் கோரிக்கை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள், போலீசார் மோதல் நல்லதல்ல. அரசு தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ஏஐடியுசி செயலாளர் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஸ்சில் காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுத்து நடத்துனருடன் தகராறு செய்ய விவகாரத்தில், காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் போக்குவரத்து மற்றும் காவல்துறை மோதலாக மாறி உள்ளது. அரசு பேருந்துகள் சாலை விதியை மீறியாதாகவும், அதிவேகத்தில் சென்றதாகவும், தமிழகம் முழுவதும் காவல்துறையினர் திட்டமிட்டு அரசு பேருந்து ஓட்டுநர்கள் மீதும், நடத்துனர்கள் மீதும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

காவல்துறையினருக்கும், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் வேலூர் மற்றும் நெல்லையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு மோதல் நடந்துள்ளது. இதுதொடர்பான விசாரணையில், எதிர்காலத்தில் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களிடையே பிரச்சனைகள் உருவாகிறது என்று சொன்னால் இருதரப்பு அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளை உடனடியாக கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட வேண்டும் என கூறியுள்ளார்.

இதேபோல், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ‘‘காவலர்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் விவகாரம், காவல்துறைக்கும், அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் இடையிலான மோதலாக மாறிவிடக் கூடாது. எனவே அரசு தலையிட்டு, மோதலை தவிர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’’ என கூறியுள்ளார்.

The post போக்குவரத்து தொழிலாளர் – போலீசார் மோதல் தீர்வு காண வேண்டும்: தொழிற்சங்கங்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: