×

டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஜெயங்கொண்டம் நகர் பகுதி முழுவதும் பழைய டயர்கள் அகற்றும் பணி தீவிரம்

 

ஜெயங்கொண்டம், மே22:ஜெயங்கொண்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயங்கொண்டம் நகர் பகுதி முழுவதும் பழைய டயர்கள் முழுவதும் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் விதமாக கலெக்டர் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ரோடு சிதம்பரம் ரோடு விருத்தாசலம் ரோடு ஆகிய சாலைகளில் உள்ள மெக்கானிக் கடைகள் பஞ்சர் கடைகள் ஆகியவற்றில் ஆய்வு செய்து கடைகளில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய டயர்கள், டியூபுகள் இதுபோன்ற மழை நீர் தேங்கியிருக்கும் இடங்களில் ஆய்வு செய்து டெங்கு உற்பத்தியாகி பரவாமல் இருக்கும் விதமாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பயன்பாடற்ற டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டது .

தேவையற்ற டயர்களை வைத்திருந்த 5 கடைக்காரர்களுக்கு ரூ.1500 அபராதமாக விதிக்கப்பட்டது. இது போன்ற ஆய்வுகள் மீண்டும் தொடர்ந்து நடைபெறும் .ஆகையினால் பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவைகளை சேர்த்து வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர்அசோக் குமார், துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் ,களப்பணி உதவியாளர் விஜயகுமார் ,சுகாதார ஆய்வாளர் ஜிஜின் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆய்வு பணி மேற்கொண்டனர்.

The post டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஜெயங்கொண்டம் நகர் பகுதி முழுவதும் பழைய டயர்கள் அகற்றும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Jayangondam Nagar ,Jayangondam ,Ariyalur district ,Dinakaran ,
× RELATED பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல்...