- அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவை
- ஜெயங்கொண்டம்
- அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம்
- 2வது
- மாவட்ட கவுன்சில்
- ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோடு
- மாவட்டம்
- துணை ஜனாதிபதி
- சிர்மபலம்
- சிஐடியு
- மாவட்ட செயலாளர்
- துரைசாமி
- அரியலூர் மாவட்டம்
- பொது தொழிலாளர்கள்
- யூனியன் கவுன்சில்
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஜூலை23: அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க 2-வது மாவட்ட பேரவை கூட்டம் ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் தனியார் மைதானத்தில் மாவட்டத் துணைத் தலைவர் சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார். பேரவை கூட்டத்தில் .சங்கர், கவிதா, நூறுபானு ஆகியோர் முன்னிலையில் வகித்து பேசினார். மாவட்ட செயலாளர் மெய்யப்பன் செயலர் அறிக்கையினை வாசித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் கூட்டத்தை தொடங்கி வைத்து துவக்க உரையாற்றினார்.
சிஐடியு மாவட்ட பொருளாளர கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் துரைராஜ், சேப்பெருமாள், தனவேல், ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கூட்டத்தில் அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரவீந்திரன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக முருகேசன், துணை தலைவர்களாக கவிதா, நூர்பானு, துணை செயலாளர்களாக சண்முகசுந்தரம், செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர்களாக அனிதா, சங்கர், சத்யா,தனலட்சுமி, பவானி ஆகியோ தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாநில துணைத் தலைவர் ரங்கராஜன் நன்றி கூறினார். முடிவில் சங்கத் தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
The post அரியலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க பேரவை நிர்வாகிகள் தேர்வு appeared first on Dinakaran.