அதிகாரிகள் சோதனையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

ராமேஸ்வரம், மே 22: ராமேஸ்வரம் தினசரி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பதப்படுத்தப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சி தினசரி மீன் மார்க்கெட்டில் நேற்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி லிங்கவேல், நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மீன் கடைகளை ஆய்வு செய்தார்.

இதில் தடை செய்யப்பட்ட மீன்கள் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ததில் பதப்படுத்தப்பட்டு கெட்டுப்போன 8 கிலோ மீன்களை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் ஐஸ் பாக்ஸில் மீன்களை பதப்படுத்தி தினசரி சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பதப்படுத்தப்படாத புது மீன்களை எப்படி பார்த்து வாங்குவது என விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post அதிகாரிகள் சோதனையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: