×

ஜெனரேட்டரில் சிக்கிபெண் உயிரிழப்பு

 

பொன்னமராவதி, மே 21: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே திருமண நிச்சயதார்த்த விழாவில் ஜெனரேட்டரில் சிக்கி பெண் பலியானார். பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் வடக்குத் தெருவைச்சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி துர்கா(35). இவர்களுக்கு 10ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. மதுபாலா, சாருபாலா,சிவபாலன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் துர்கா நேற்று முன்தினம் இரவு அங்குள்ள திருமண மண்டத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றுள்ளார்.

அப்போது மண்டபத்தில் முன்பு ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்த பகுதிச் சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக ஜெனரேட்டரில் சிக்கி சம்ப இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறந்த துர்காவின் உடலை வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெனரேட்டரில் சிக்கிபெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Pudukottai district ,Raja ,Thirukkalampur North Street ,Ponnamaravathi ,Durga ,
× RELATED பொன்னமராவதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்க வேண்டும்