×
Saravana Stores

பொன்னமராவதியில் வர்த்தகர்கள் இன்று அடையாள கடையடைப்பு 1 மணிநேரம் நடத்த முடிவு

 

பொன்னமராவதி, ஜூலை 18: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் காரணமாக சாலையில் புழுதி பறப்பதால் அதனை கண்டித்து வர்த்தக கழகம் சார்பில் இன்று அடையாள கடையடைப்பு இன்று நடைபெறுகிறது. பொன்னமராவதி பிரதான சாலையான அண்ணா சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் வேலை நடைபெற்று, முழுமை அடையாததால் சாலையில் புழுதி பறந்து பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் கடையில் உள்ள பொருட்களும் தூசியடைவதால் வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே புழுதி பறக்காமல் சாலையை சீர் செய்து தர வேண்டி பொன்னமராவதி வர்த்தகர் கழகம் சார்பாக இன்று (18ம் தேதி) காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேர அடையாள கடையடைப்பு நடைபெறும் அனைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு பொன்னமராவதி வர்த்தகர் கழகம் தெரிவித்துள்ளது.

 

The post பொன்னமராவதியில் வர்த்தகர்கள் இன்று அடையாள கடையடைப்பு 1 மணிநேரம் நடத்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Ponnamaravati district ,Pudukottai district ,Anna Road ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே மழைபெய்யாததால்...