ராமர் கோயில் கட்டியது தேர்தல் பிரச்னை அல்ல: மேனகா காந்தி பேட்டி

சுல்தான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பாஜ வேட்பாளரும் 8 முறை எம்பியுமான மேனகா காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது மகன் வருண் காந்திக்கு பிலிபிட் தொகுதியில் பாஜ சீட் தர மறுத்தது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ரேபரேலி தொகுதியில் இருந்து காங்கிரசை அழிக்க வேண்டுமென பாஜ அழைப்பு விடுத்திருப்பது குறித்து என்னிடம் எந்த கருத்தும் இல்லை. என்னைப் பொறுத்த வரையில் எனது சொந்த தொகுதி, இங்குள்ள மக்களின் பிரச்னைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

2019ல் சுல்தான்பூரில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை எனது வெற்றி வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பதை எண்ணி எனது தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனாலும், அது இங்குள்ள தேர்தல் பிரச்னை இல்லை. தேர்தலில் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கிடைக்குமா என்பது என் கையில் எதுவுமில்லை. அது பிரதமர் மோடியின் உரிமை என்றார்.

The post ராமர் கோயில் கட்டியது தேர்தல் பிரச்னை அல்ல: மேனகா காந்தி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: