வீட்டில் இருந்தபடி வாக்களித்த மன்மோகன் சிங், அத்வானி

புதுடெல்லி: முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி மற்றும் முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வீட்டில் இருந்தபடியே வாக்களித்துள்ளனர். டெல்லியில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 85 வயதை கடந்த மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது.

மக்களவை தேர்தலில் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்காக டெல்லியில் மட்டும் 5406 பேர் பதிவு செய்துள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு வியாழனன்று தொடங்கியது. வருகிற 24ம் தேதி கடைசி நாளாகும். முதல் நாளில் 1482 பேர் வீட்டில் இருந்தபடியே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இரண்டாவது நாளான நேற்று முன்தினம் 1409 பேர் மக்களவை தேர்தலுக்காக வீட்டில் இருந்து வாக்களித்தனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கடந்த 17ம் தேதி டெல்லி நாடாளுமன்ற தொகுதிக்காக வீட்டில் இருந்து வாக்களித்தனர். முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வாக்களித்த நிலையில், முன்னாள் துணை பிரதமர் அத்வானி நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

The post வீட்டில் இருந்தபடி வாக்களித்த மன்மோகன் சிங், அத்வானி appeared first on Dinakaran.

Related Stories: