கள்ளத் துப்பாக்கி தயாரித்த உ.பி. தற்போது பீரங்கி குண்டு உருவாக்குகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம்

லலித்பூர்: உத்தரப்பிரதேசத்தை பீரங்கி குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு பிரதமர் மோடி வளர்ச்சியடைய செய்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் லலித்பூரில் நடந்த பாஜ தேர்தல் பிரசார பேரணியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

அப்போது பேசிய அமித் ஷா, ‘‘உத்தரப்பிரதேசத்தில் கள்ளத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பந்தல்கண்ட்டில் பாதுகாப்பு வழித்தடத்தை உருவாக்கினார். இப்போது இங்கு பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்தால் பந்தல்கண்ட்டில் செய்யப்பட்ட குண்டுகள் அந்நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் ” என்றார்.

The post கள்ளத் துப்பாக்கி தயாரித்த உ.பி. தற்போது பீரங்கி குண்டு உருவாக்குகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: