×

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: ஆந்திராவில் நாடாளுமன்றம், பேரவை தேர்தலின்போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது ஏன் என தேர்தல் ஆணையத்திடம் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை நேரில் விளக்கம் அளிக்குமாறு ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chief Secretary ,DGP ,Andhra Pradesh ,Delhi ,Andhra ,Parliament ,Pradesh ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை ஆந்திர...