×

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன: விவசாயிகள் கவலை

கிருஷ்ணராயபுரம், மே 7: கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கோடை மழை பெய்ததில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் கீழே ஒடிந்து விழுந்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள திருக்காம்புலியூர்,பிச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம்,மகாதானபுரம், பொய்கை புத்தூர் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் வாழைத்தாருடன் கீழே ஒடிந்து விழுந்ததில் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான விவசாயிகள் கடன் வாங்கி வாழை சாகுபடி செய்துள்ளனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் கவலை அடைந்துள்ளனர். பலத்த காற்றில் கீழே ஒடிந்து விழுந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன் மழை: 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Karur District ,Krishnarayapuram… ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...