சாலையோர மணல் குவியலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

கரூர், ஜூன் 18: கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் குன்னனூர் பிரிவு முதல் வீரராக்கியம் பிரிவு வரை சாலையின் இருபுறமும் பரவியுள்ள மணற்பரப்புகளை சீர் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்-திருச்சி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலையில், குன்னனுர் பிரிவு முதல் வீரராக்கியம் பிரிவு வரை அதிக வாகன போக்குவரத்து மற்றும் காற்றின் காரணமாக சாலையின் இருபுறமும் அதிகளவு மணல் பரவியுள்ளது.

இவை, இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் வாகன விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. எனவே, அதற்கான பணியாளர்கள் மூலம் சாலையோரம் பரவியுள்ள மணல்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு அதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சாலையோர மணல் குவியலால் வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: