வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு சர்ச்சைக்குரிய எம்பி பிரிஜ்பூஷன் மகனுக்கு பாஜ சீட்

புதுடெல்லி: குத்துசண்டை வீராரங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ எம்பி பிரிஜ்பூஷன் சரண் சிங்கின் மகனுக்கு தேர்தலில் போட்டியிட பாஜ வாய்ப்பு வழங்கியுள்ளது. உபி மாநிலம், கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜ சார்பில் எம்.பி.,யாக வெற்றி பெற்றவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இந்திய குத்துசண்டை சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்தார். பிரிஜ் பூஷன் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குத்து சண்டை வீராரங்கனைகள் குற்றம்சாட்டி பல நாட்கள் போராட்டம் நடத்தினர். பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பல ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில், கைசர்கஞ்ச் தொகுதி மற்றும் ரேபரேலி தொகுதிக்கான வேட்பாளர்களை பாஜ நேற்று அறிவித்தது. இதில் கைசர்கஞ்சில் பிரிஜ் பூஷன் சிங்குக்கு பதிலாக அவரது மகன் கரண் பூஷன் சிங், ரேபரேலியில் உபி அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு சர்ச்சைக்குரிய எம்பி பிரிஜ்பூஷன் மகனுக்கு பாஜ சீட் appeared first on Dinakaran.

Related Stories: