முலாயமின் குடும்பத்தினர் மீது பாஜவுக்கு அச்சம்: சிவபால் சிங் பேட்டி

பதாவுன்: சமாஜ்வாடியின் மூத்த தலைவர் சிவ்பால் சிங் யாதவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, சமாஜ்வாடி கட்சி என்பது ஒரு கட்சி அல்ல, ஒரு குடும்பத்திற்கு சொந்தமானது என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிவ்பால் கூறுகையில்,‘‘ சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங்கின் குடும்பத்தினரை கண்டால் பாஜவுக்கு பயம். சமாஜ்வாடி தலைவரின் குடும்பத்தை பற்றி பாஜ பேசி வந்தால் தேர்தலில் கட்சி வெற்றிவாய்ப்பு அதிகரிக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள் தான் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய வாக்காளர்கள். அவர்கள் வெயிலை பற்றி கவலைப்படாமல் வாக்குரிமையை செலுத்துகின்றனர். பாஜவின் வாக்காளர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது இல்லை. இதனால் தான் முதல் 2 கட்ட தேர்தலில் வாக்குசதவீதம் குறைந்தது அந்த கட்சியின் தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

The post முலாயமின் குடும்பத்தினர் மீது பாஜவுக்கு அச்சம்: சிவபால் சிங் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: