நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஓவைசி வலியுறுத்தல்

கிஷன்கஞ்ச்: நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார். பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மக்களவை தொகுதியில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும், பீகார் மாநில தலைவரும், எம்எல்ஏவுமான அக்தருல் இமானை ஆதரித்து ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,’ பெண்கள் அரசியலில் பங்கேற்பதற்கு எதிராக எங்கள் கட்சியை பாஜ-ஆர்எஸ்எஸ் பொய்யாக குற்றம் சாட்டுகிறது. 2004ம் ஆண்டிலேயே, செகந்திராபாத்தில் ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தியிருந்தோம். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாட்டில் 17 மக்களவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால் எம்.பி.களாக ஆன முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 20 மட்டுமே. நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஏன் இல்லை. இதுதொடர்பாக மக்களவையில் நான் திருத்தம் கொண்டு வந்த போது சபாநாயகர் ஓம் பிர்லா என்னிடம்,’ நீங்கள் ஒரு திருத்தத்தை கொண்டு வர விரும்புகிறீர்கள், ஆனால் உங்களை ஆதரிக்க யாரும் இல்லை’ என்று கூறினார். ஆனால் நான்,’அல்லாஹ் என்னுடன் இருக்கிறார்’ என்று பதிலளித்தேன்’ என்றார்.

The post நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஓவைசி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: