வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு; கோடையை சமாளிக்குமா சென்னை?: குடிநீர் வழங்கும் ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்..!!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 2015 போல் 2023ல் பெருமழை பெய்தும் வறட்சியை நோக்கிச் ஏரிகள் செல்கிறது. கடந்தாண்டை காட்டிலும் நடப்பாண்டில் 1.5 சதவீதம் வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து பகல் நேரங்களில் அனலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூரைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகளிலும் நீர்மட்டம் குறைந்துள்ளது. 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 7.1 டி.எம்.சி நீர் மட்டுமே தற்போது இருப்பு இருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி நீர் இன்றி வறண்டு போய்விட்டது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. எனவே இந்த கோடையை சென்னை சமாளிக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

The post வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு; கோடையை சமாளிக்குமா சென்னை?: குடிநீர் வழங்கும் ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: