முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் முரண்பாடு சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிப்பு

சூரத்: சூரத் காங்கிரஸ் வேட்பாளர் மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் உள்ள முரண்பாடுகளால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்பு மனு தாக்கல் செய்தார். பரிசீலனையின்போது நிலேஷ் கும்பானியின் பெயரை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்து போட்டவர்கள் வேட்புமனுவில் உள்ள கையொப்பம் தங்களுடையது இல்லை என தெரிவித்தனர். அதே போல் மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலாவின் மனுவை முன்மொழிந்தவர்களும் அது தங்களின் கையெழுத்து இல்லை என கூறி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் அதிகாரி நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினர். இதில், நிலேஷ் கும்பானி, மாற்று வேட்பாளர் சுரேஷ் பட்சாலா ஆகியோரிடம் விளக்கங்களை கேட்டார். அவர்கள் பதிலளிப்பதற்கு நேற்று காலை அவகாசம் கொடுத்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ். மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி நேற்று தெரிவித்தார். இதனால், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

The post முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் முரண்பாடு சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: