நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்

*வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

நாகர்கோவில் : கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. நேற்று வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த வாக்கு சாவடிகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கோணத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. மலையோர பகுதிகள், குமரி கடலோர பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் நள்ளிரவு வரை கொண்டு வரப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2 டி.எஸ்.பி.க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 போலீசார் வீதம், சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டாங்க் ரூம் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் இருக்கும் வகையில் மின் இணைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனி கட்டுப்பாட்டு அறை மற்றும் பாதுகாப்பு தற்காலிக டவர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரவிலும் அதிக வெளிச்சம் இருக்கும் வகையில் தனி இணைப்புகள் கொடுக்கப்பட்டு மின் சப்ளை வழங்கப்பட்டு உள்ளது.

The post நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: