தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46% மட்டுமே வாக்குப்பதிவு: நள்ளிரவில் மாற்றிய தேர்தல் ஆணையம்

சென்னை: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என ஆதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. சென்னையில் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இரவு 7:00 மணி நிலவரப்படி 72:09 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நள்ளிரவில் அதனை மாற்றி 69.46 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக வாக்குப் பதிவான தருமபுரி தொகுதியில் கடந்த தேர்தலில் 82.33% வாக்குகள் பதிவாகி இருந்தன. கள்ளக்குறிச்சி 79.25%, பெரம்பலூரில் 77.37%, சிதம்பரம் 75.32% சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. நாமக்கல்லில் 78.16%, கரூரில் 78.621%, அரக்கோணத்தில் 74.08% வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆரணி 75.65%, சேலம் 78.13%, விழுப்புரம் 76.47%, திருவண்ணாமலை 73.88%, வேலூர் 73.42% வாக்குகள் பதிவாகி உள்ளன.

நாகை 71.55%, திருப்பூர் 70.58%, திருவள்ளூர் 68.31%, தேனி 69.87%, மயிலாடுதுறை 70.06%, ஈரோடு 70.54% வாக்குப்பதிவு. காஞ்சிபுரம் 71.55%, கிருஷ்ணகிரி 71.31%, கடலூர் 72.28%, விருதுநகர் 70.17%, பொள்ளாச்சியில் 70.70% வாக்குப்பதிவு. திண்டுக்கல் 70.99%, திருச்சி 67.45%, கோவை 64.81%, நீலகிரி 70.93%, தென்காசி 67.55%, சிவகங்கை 63.94% வாக்குப்பதிவு. ராமநாதபுரம் 68.18%, தூத்துக்குடி 59.96%, நெல்லை 64.10%, கன்னியாகுமரி 65.46%, தஞ்சை 68.18% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் 69.46% மட்டுமே வாக்குப்பதிவு: நள்ளிரவில் மாற்றிய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: