ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால்

கே.வி.குப்பம், ஏப்.17: கே.வி.குப்பம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் ஈரோடு வாலிபர் கொண்டு சென்ற ₹50 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வேலூர் மக்களவை தொகுதி, கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் வணிக வரித்துறை அதிகாரி முருகேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த வாலிபரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். பின்னர், அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் ₹50 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ஈரோடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம்(40) என்பதும், அவரிடம் இருந்த பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

The post ஈரோடு வாலிபரிடம் ₹50 ஆயிரம் பறிமுதல் உரிய ஆவணம் இல்லாததால் appeared first on Dinakaran.

Related Stories: