எனது கணவர் ஜாக்குவார் தங்கம், மகன்கள் கிருஷ்ணன், ஜெய் ஆகியோருடன் எம்ஜிஆர்.நகர் அன்னல் காந்தி தெருவில் வசித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் முதல் 23 வயது இளம்பெண்ணை என் கணவர் தினமும் வீட்டிற்கு அழைத்து வந்து இரவு நேரங்களில் தங்க வைத்து அனுப்புகிறார். கடந்த 15ம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்தபோது, நானும் எனது 2 மகன்களும் அவரை கண்டித்தோம். இதனால் எங்களை வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டார். எனவே, எனது கணவர் மற்றும் கள்ளத்தொடர்பில் உள்ள பெண்ணை அழைத்து கண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார் appeared first on Dinakaran.