துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

புழல்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சோழவரம் அருகே துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. 18வது நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில், சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமார், மனோகரன் மற்றும் போலீசார், துப்பாக்கிகள் ஏந்திய துணை ராணுவப் படையினர் செங்குன்றம் அடுத்த சோலையம்மன் நகர், ஆட்டந்தாங்கல், காந்தி நகர், திருவள்ளூர் நெடுஞ்சாலை, அம்பேத்கர் நகர் மேம்பாலம் உட்பட முக்கிய சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

பொதுமக்கள் அச்சமின்றி தங்களுடைய ஜனநாயக கடமையையாற்றிட வேண்டும் என்பதை வலியறுத்தும் விதமாகவும், அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் உள்ளதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

 

The post துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: