விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர்: வெளியேற்ற கோரிக்கை

விருதுநகர்: விருதுநகரில் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி வருகிறது. கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் நகராட்சியில் பாதாளச்சாக்கடை திட்ட பணிகள் 2007ல் துவங்கி இன்று வரை நிறைவடையவில்லை. நகரில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் முழுமை பெறாத நிலையில், நகரின் பெரும்பான்மையான கழிவுநீர் கௌசிகா ஆற்றில் விடப்பட்டு வருகிறறது. பாதாளச்சாக்கடை கழிவுநீர் குழாய்கள் 6 அடி ஆழம் துவங்கி 20 அடி ஆழம் வரை பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் 4 இன்ச் முதல் 12 இன்ச் வரையிலான மண் குழாய்கள் பாதிக்கப்பட்ட இருக்கின்றன. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் 4 இன்ச் குழாய்களில் கொண்டு செல்லப்படுவதால் பல இடங்களில் மண் குழாய்கள் மக்கி அடைத்து போய் கிடக்கின்றன. ராமமூர்த்தி ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல் அருப்புக்கோட்டை ரோடு வரை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் ஆங்காங்கே ஓடைகளில் விடப்பட்டு குல்லூர்சந்தை அணையில் கலக்கின்றன.

நகரில் சாரள் மழை பெய்தால் கூட நகரில் பாதளாச்சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்து விடுகிறது. பழைய பஸ் நிலைய அருகில் உள்ள நகராட்சி வரி வசூல் மையத்திலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மதுரை ரோட்டில் நகராட்சி குடிநீர் நீரேற்று தொட்டியின் வெளிப்பகுதியிலும் கழிவுநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. நகரில் பாதாளச்சாக்கடை குழாய்களில் செல்ல வேண்டிய கழிவுநீர் சாலைகளிலும், ஓடைகளிலும், கௌசிகா ஆற்றில் சென்று குல்லூர்சந்தை அணையில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால் தெருக்களில் தேங்கும் கழிவுநீர்: வெளியேற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: