மக்கள் பணத்தில் ஒரு நாளைக்கு ₹1.50 கோடி ஆடை: ‘மோடி என்னை விட சிறந்த நடிகர்’

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து, திமுக நட்சத்திர பேச்சாளர் நடிகர் வாகை சந்திரசேகர் ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி, முத்துநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, ஒரு நாளைக்கு மூன்று உடை உடுத்துகிறார். ஒரு உடையின் விலை ₹50 லட்சம். ஒரு நாளைக்கு மூன்று உடைகள் அணிந்து, பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். அதனால், ஒரு நாளைக்கு மட்டும் ₹1.50 கோடி உடை அணிக்கிறார். மக்களின் வரி பணத்தை இப்படியெல்லாம் வீணாக செலவு அளிக்கிறார். நான் நடிகர் என்று சொல்லிக் கொள்வதை விட, மோடி ரொம்ப பெரிய நடிகர். சிறந்த நடிகராக மக்களிடம் நடிக்கிறார்.

மோடியை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். அப்போது தான் நாம் தமிழ் பேச முடியும். நமக்கென்று உள்ள குலசாமியை கும்பிட முடியும். அது மட்டுமல்ல ஆடு, கோழி வெட்ட முடியும். மீண்டும் மோடி வந்து விட்டால், கோயிலில் ஆடு, கோழி வெட்ட முடியாது. ஒரே மொழி தான் பேச முடியும். ஒரே தெய்வத்தை தான் கும்பிட முடியும். இது ரொம்ப கொடுமை. உலகத்தில் எந்த நாட்டிலும் அப்படி இல்லை. அவர்கள் வந்து விட்டால் இனி எம்.பி., எம்.எல்.ஏ கிடையாது. தேர்தல் கிடையாது, எல்லாம் சர்வாதிகார ஆட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்கள் பணத்தில் ஒரு நாளைக்கு ₹1.50 கோடி ஆடை: ‘மோடி என்னை விட சிறந்த நடிகர்’ appeared first on Dinakaran.

Related Stories: