தஞ்சாவூர் மாவட்டத்தில் 8.31 மிமீ சராசரி மழை பதிவு

தஞ்சாவூர், ஏப். 14: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரு சில பகுதியில் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக ஈச்சன்விடுதி பகுதியில் 55.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் அதிக அளவில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் யாரும் சாலையில் நடக்க முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு மதியம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.

இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சன் விடுதி பகுதியில் அதிகபட்சமாக 55.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் தஞ்சாவூரில் 2, வல்லம் 2, குருங்குளம் 18.20, பூதலூர் 14, கல்லணை 3, நெய்வாசல் தென்பதி 2.60, வெட்டிக்காடு 34.20, அய்யம்பேட்டை 14, மஞ்சளாறு 7.20, பட்டுக்கோட்டை 6, அதிராம்பட்டினம் 13.30, மதுக்கூர் 2.60 என மொத்தமாக 174.50 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் சராசரியாக 8.31 செ.மீ. வரை பதிவாகி உள்ளது என தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

The post தஞ்சாவூர் மாவட்டத்தில் 8.31 மிமீ சராசரி மழை பதிவு appeared first on Dinakaran.

Related Stories: