மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம்

வேலூர், ஏப்.14: வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் தண்டவாள பராமரிப்புப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை முன்னிட்டு வேலூர் கன்டோன்மென்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 06736 வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம் இடையிலான மெமு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 17, 24 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மறுமார்க்கத்தில் அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 06735 அரக்கோணம்- வேலூர் கன்டோன்மென்ட் மெமு எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 17, 24 மற்றும் 26 ஆகிய 3 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post மெமு எக்ஸ்பிரஸ் ரயில் 3 நாட்கள் ரத்து வேலூர் கன்டோன்மென்ட்- அரக்கோணம் appeared first on Dinakaran.

Related Stories: