தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கடந்த பிப். மாதமே முதலே தமிழ்நாட்டில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருவமழை முடிந்த உடன் அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம், பிப். மாதம் சதமடிக்கத் தொடங்கியது. ஈரோடு, கரூர் பரமத்தி என பல்வேறு இடங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உச்சத்தில் வெப்பம்: இப்படி கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா, தெற்கு தமிழகம், மேற்கு தமிழகப் பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது.

பிப். மாதம் தொடங்கிய வெயில் படுத்தி எடுத்து வந்த நிலையில், இந்த மழை மிகப் பெரிய நிம்மதியைக் கொடுப்பதாக இருக்கிறது. அதன்படி இன்றும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: