பைக் மெக்கானிக் போக்சோவில் கைது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த

குடியாத்தம், ஏப்.13: பேரணாம்பட்டு அருகே சிறுமியிடம் பாலியல் சிஷ்மிஷம் செய்த பைக் மெக்கானிக் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று சிறுமி அதே கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் ரமேஷ்(24) என்பவர் சிறுமியிடம், எனது வீட்டில் நாய் குட்டி போட்டுள்ளது. இதை உனக்கு பரிசாக கொடுக்கிறேன் எனக்கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் பைக் மெக்கானிக் ரமேஷ் மீது போக்ேசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நேற்று இரவு கைது செய்தனர். கைதான ரமேஷூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.

The post பைக் மெக்கானிக் போக்சோவில் கைது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த appeared first on Dinakaran.

Related Stories: