பாஜ முகத்துல பயம் தெரியுது: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு

பிலிபித்: உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பிலிபித் தொகுதியில் முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜவை சேர்ந்த வருண் காந்தி தற்போது பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

வரும் தேர்தலில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என வருண் காந்தி எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக மாநில அமைச்சர் ஜிதின் பிரசாத்தை பாஜ களமிறக்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக அனிஸ் அகமது போட்டியிடுகிறார். இந்நிலையில் பிலிபித் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி வேட்பாளர் பகவத் சரண் கங்வாருக்கு ஆதரவாக நேற்று அகிலேஷ் யாதவ் வாக்கு சேகரித்தார்.

அப்போது நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், “தேர்தல் பத்திரமும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்தான் கருப்பு பணத்தை வௌ்ளையாக்க வழியா? இதை விட்டால் வேறு வழி இல்லையா? பணமதிப்பிழப்பு மூலம் பாஜ கட்சியினரின் கருப்பு பணம்தான் வௌ்ளையானது. பிலிபித் மக்கள் பாஜவை தோற்கடிக்க முடிவு செய்து விட்டனர். இதுதெரிந்ததால் பிலிபித் பெயரை கேட்டாலே பாஜவின் முகத்தில் பயம் தெரிகிறது” என்று தெரிவித்தார்.

The post பாஜ முகத்துல பயம் தெரியுது: அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: