ஜி பே ஸ்கேன் பண்ணுங்க… மோடி ஸ்கேம் பாருங்க… தெறிக்கவிட்ட போஸ்டர்கள்

இந்தியாவில் உள்ள வடமாநிலத்தில் ஒருவரை அழைக்கவேண்டும் என்றால் ஜி என்று தான் அழைப்பார்கள். தமிழகத்திலும் சமீபத்தில் அந்த ஜி என்ற வார்த்தை குறிப்பிட்ட சிலரால் மட்டும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வடநாடு கட்சியான பாஜவில் இருக்கும் நபர்கள் தான் இது போன்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள். மோடி ஜி, அமித்ஷா ஜி, என்று எல்லாம் அழைப்பார்கள். தமிழகத்தில் பாஜவை சேர்த்தவர்கள் மரியாதை நிமித்தம் என்னும் சாக்கில் இவ்வாறு அழைத்து வருகின்றனர். தமிழகத்தில் இருக்கும் மக்கள் மரியாதை நிமித்தமாக அண்ணா என்று தான் அழைப்பார்கள்.

வடநாட்டில் உள்ள பாஜ கட்சியை சார்ந்தவர்கள் தமிழகத்தில் இருப்பது சிலர் தான். அவர்கள் மட்டுமே இது போன்று ஜி என்று அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு புரியும் வகையில் பிரதமர் மோடி ஜி செய்த ஊழலை யுஆர்எல் மூலம் ஸ்கேனரை உருவாக்கி அதனை போஸ்டராக சென்னை, பல்லடம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோடி முகத்துடன் ‘ஜி பே’ , ‘ஸ்கேன் பண்ணுங்க, ஸ்கேம் பாருங்க’ என்ற வசனத்துடன் ஒட்டப்பட்டு உள்ளது.

அந்த யுஆர்எல் ஸ்கேன் மூலம் தெரிவிப்பதாவது: ஊழல் நிறைந்த இந்த மோடி அரசு இனியும் நம்மை ஆட்சி செய்தால் நாம் மானத்தையும், கோவணத்தையும் இழக்க நேரிடும். கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு ஒருவர் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவதாக சொன்னார்கள் அது என்ன ஆச்சு? இவர்கள் பண்ண வசூல் தான் அதிகமாக இருந்தது. 2019 முதல் தேர்தல் பத்திரம் மூலம் 1300 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மூலம் ₹6000 கோடி நூதன முறையில் பாஜக வசூல் செய்துள்ளது. சிஏஜி அறிக்கை மூலம் ₹7.5 லட்சம் கோடி ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. சுங்கச்சாவடியில் விதி முறைகளை மீறி 132 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளனர்.

தனியார் நிறுவனங்கள் பல வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாததால் 25 லட்சம் கோடி தள்ளுபடி செய்துள்ளனர். இது போன்று பல ஆயிரம் கோடி பாஜக ஊழல் செய்துள்ளது. இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் இருந்து வாங்கும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே மீண்டும் அளித்து தமிழ் மக்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். இப்படி ஊழலில் ஊறி கிடக்கும் பாஜகவையும், மாநில உரிமைகளை அடகு வைத்து தற்போது பாஜக உடன் கள்ள கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் விரட்டி அடிப்போம். இனியும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தால் தமிழர்கள் சொந்த நாட்டில் 2ம் தர குடிமக்களாக நடத்துவார்கள். இதுவே உண்மை. எனவே சிந்தித்து இந்தியா கூட்டணிக்கு வாக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜி பே ஸ்கேன் பண்ணுங்க… மோடி ஸ்கேம் பாருங்க… தெறிக்கவிட்ட போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: