இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் மைக் சின்னத்தை பொருத்த வேண்டும்: நாதக புகார்

நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சங்கர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ள மைக் சின்னத்திற்கு பதில் வேறு ஒரு மைக் சின்னம் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தபட்டு வருகிறது. அதனை தடுத்து நிறுத்தி எங்களுக்கு ஒதுக்கிய மைக் சின்னத்தை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் வாக்கு வங்கியை பாதிக்கவே பாஜ இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இது எங்கள் வாக்கு வங்கியை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

* தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள்
தமிழகத்திற்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். இவர்களில் எத்தனை கம்பெனி எந்தெந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: சென்னை நகரம் – 7 கம்பெனி, ஆவடி நகரம் – 3, தாம்பரம் நகரம் – 3, கோவை நகரம் – 6, திருப்பூர் நகரம் – 3, சேலம் நகரம் – 4, திருச்சி நகரம் – 4, மதுரை நகரம் – 7, திருநெல்வேலி நகரம் – 3, காஞ்சிபுரம் – 5, திருவள்ளூர் – 4, செங்கல்பட்டு – 3, வேலூர் – 5, திருவண்ணாமலை – 5, ராணிப்பேட்டை – 3, திருப்பத்தூர் – 4, விழுப்புரம் – 5, கடலூர் – 5, கள்ளக்குறிச்சி – 3, திருச்சி – 3, பெரம்பலூர் – 3, அரியலூர் – 2, கரூர் – 3, புதுக்கோட்டை – 3, தஞ்சாவூர் – 6, திருவாரூர் – 3, நாகப்பட்டினம் – 2, மயிலாடுதுறை – 2, சேலம் – 5, நாமக்கல் – 3, தர்மபுரி – 4, கிருஷ்ணகிரி – 4, கோவை – 7, ஈரோடு – 4, திருப்பூர் – 5, நீலகிரி – 2, மதுரை – 4, விருதுநகர் – 5, திண்டுக்கல் – 4, தேனி – 6, ராமநாதபுரம் – 4, சிவகங்கை – 4, திருநெல்வேலி – 5, தூத்துக்குடி – 6, கன்னியாகுமரி – 6, தென்காசி – 3 என மொத்தம் 190 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் மைக் சின்னத்தை பொருத்த வேண்டும்: நாதக புகார் appeared first on Dinakaran.

Related Stories: