ரம்ஜான் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

உளுந்தூர்பேட்டை: ரம்ஜான் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் காலை முதலே விற்பனை தொடங்கியது. ஆடுகளை வாங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தந்தனர். 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே பணம் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேர்தல் விதிமுறைகளால் வழக்கத்தை விட விற்பனை சற்று மந்தமாகவே இருந்தது. ஒரு ஆட்டின் விலை 7 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

பண்டிகை நாட்களில் வழக்கமாக அதிகளவில் விற்பனை நடைபெறும் நிலையில், தற்போது குறைந்த அளவில் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதாவது நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு குறிப்பிட்ட தொகைக்கு மேல் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரம்ஜான் பண்டிகை காலங்களிலும் சந்தை வியாபாரம் சரியாக நடக்காமல் களை இழந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளி, ரம்ஜான், போன்ற பண்டிகை காலங்களிலும், திருவிழா நடைபெறும் நாட்களிலும் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் கோடி கணக்கில் வியாபாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரம்ஜான் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: